என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இம்ரான்கான் கட்சி
நீங்கள் தேடியது "இம்ரான்கான் கட்சி"
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர், அவரது டிரைவர் மற்றும் பாதுகாவலர் உள்ளிட்ட 3 பேர் பலியாகினர். #ImranKhan #Tehreek-e-Insaf
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் சில மாகாணங்களில் வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து அங்குள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த இம்ரான்கான் கட்சி வேட்பாளர் இக்ரமுல்லா கண்டாபூர் வாகனத்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் கண்டாபூர் படுகாயம் அடைந்தார். அவரது பாதுகாவலர் மற்றும் டிரைவர் ஆகியோர் பலியாகினர். படுகாயம் அடைந்த கண்டாபூர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்டாபூர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. தற்கொலைப்படை தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#ImranKhan #Tehreek-e-Insaf
பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் இம்ரான்கான் கட்சிக்கு அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மத தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார். #PakistanElection #ImrankhanParty
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் சில மாகாணங்களுக்கான தேர்தல் வரும் 125ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெக்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் இம்ரான்கான் கட்சிக்கு அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மத தலைவர் மவுலானா பர்சூல் ரகுமான் கலீல் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹர்கதுல் முஜாஹிதின் அமைப்பை சேர்ந்தவர் மவுலானா பர்சூல் ரகுமான் கலீல். இந்த அமைப்பு மீது அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PakistanElection #ImrankhanParty
பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் சில மாகாணங்களுக்கான தேர்தல் வரும் 125ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெக்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹர்கதுல் முஜாஹிதின் அமைப்பை சேர்ந்தவர் மவுலானா பர்சூல் ரகுமான் கலீல். இந்த அமைப்பு மீது அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PakistanElection #ImrankhanParty
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் மந்திரி டேனியஸ் அஜீஸை இம்ரான்கான் கட்சியின் முக்கிய தலைவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் ‘ஜியோ’ நியூஸ் சேனல் சமீபத்தில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்தியது. அதில் தனியார்மய துறை மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் நீமுல் ஹக், பாகிஸ்தான் மக்கள் கட்சி நபீசா ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கான் கட்சி தலைவர் நீமுல் ஹக்கை ‘திருடன்’ என தெரிவித்தார்.
அதனால் ஆத்திரம் அடைந்த ஹக் மந்திரி டேனியல் அஜீஸை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதை சற்றும் எதிர்பாராத அஜீஸ் நிலை குலைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் நபீசா ஷா, மற்றொரு சிறப்பு அழைப்பாளர் ஒருவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து டி.வி. நிகழ்ச்சியும் பாதியில் முடிக்கப்பட்டது.
நடந்த சம்பவத்துக்கு மந்திரி அஜீஸ் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, “இது பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இன்சாப் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய சதி. ராணுவம் மற்றும் நீதித்துறையின் பின்னணியில் இருந்து கொண்டு இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கு அழிந்து விடுகிறது என்றார்.
இதுகுறித்து, இம்ரான் கான் கட்சி தலைவர் ஹக் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அஜீஸ் ராணுவ தளபதிகள் குறித்தும், இம்ரான்கான் குறித்தும் நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசினார். அவர் தனது போக்கை மாற்றிக் கொண்டு உண்மையை பேசுவார்” என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு இவர் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஜமீல் எஸ்.காம்ரோ மீது தண்ணீர் டம்ளரை வீசியுள்ளார். #Tamilnews

×

X